குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்: ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி
டெல்லி: குஜராத் மாநிலத்தில் தலித் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அடுத்தடுத்து இருமுறை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று காலை ராஜ்யசபா துவங்கியத்தில் இருந்தே காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குஜராத்தில் உனா பகுதியில் தலித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேச வேண்டும் என்றும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவையின் மத்தியப் பகுதிக்கு சென்று கூச்சல் எழுப்பினர். இதனால் இன்று மதியம் 12 மணி வரை அவையை ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் ஒத்தி வைத்தார். மீண்டும் அவை கூடியதும், எதிர்கட்சியினர் ஒன்று கூடி கூச்சலிட்டனர். இதனையடுத்து அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது இந்த பிரச்சினையை எதிர்கட்சியினர் எழுப்பியும் பிரச்சினை எதுமின்றி அவை நடைபெற்றது.
குஜராத்தில் தலித் இளைஞர்கள் சரமாரியாக தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 11ம் தேதி குஜராத்தின் உணா பகுதியில் பசுந்தோலை கடத்தியதாக கூறி 4 இளைஞர்களை ஒரு கும்பல் கட்டி வைத்து தடியால் தாக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்த தலித் இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு சம்பவத்தில் காவலர் ஒருவரும், பூச்சி மருந்து சாப்பிட்ட இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தலித் இயக்கத்தினர் கோண்டல், ஜுனாகட் பகுதியில் முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பசு பாதுகாப்பு கும்பலால் தாக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரை இழப்பீடு அறிவித்துள்ளது. இளைஞர்களை தாக்கியது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications