அதிகரிக்கும் ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல்.. உள்துறை அமைச்சருடன் சுஷ்மா அவசர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் காங்கோ நாட்டு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலால் ஆப்பிரிக்க நாடுகளில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. காங்கோ தலைநகர் கின்ஹாசாவில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன. இந்தியர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள்.

மேலும் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும் கூட இந்தியாவில் ஆப்பிரிக்கர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அதிர்ச்சியும், கோபமும் வெளிப்படுத்தியிருந்தனர். இதையடுத்து மத்திய அரசு சுதாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, டெல்லியில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளைஞர் மசுன்டா ஆலிவரின் உடலை காங்கோவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஜ்நாத் சிங்குடன் பேசியது குறித்து சுஷ்மா கூறுகையில், நான் ராஜ்நாத் சிங், ஜங் ஆகியோருடன் பேசினேன். ஆலிவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுடப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களைச் சந்தித்து சமாதானப்படுத்துமாறு இணை அமைச்சர் வி.கே.சிங், செயலாளர் அமர் சின்ஹா ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications