டெல்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தாக்குதல் - 10 முக்கிய தகவல்கள்
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நேற்று (வியாழன்) இரவு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் அங்கு உண்டான பதற்றமான சூழல், டெல்லி-ஹரியானா இடையில் உள்ள சிங்கு, டிக்ரி ஆகிய மாநில எல்லைகளுக்கும் பரவியுள்ளது.
சிங்கு, டிக்ரி பகுதிகளில் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த, உள்ளூர்வாசிகள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் விவசாயிகள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. அந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது என்ன என்பதை பிபிசி 10 முக்கிய புள்ளிகளாகத் தொகுத்து வழங்குகிறது.
1. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-இன் கீழ், காசிப்பூர் எல்லையில் உள்ள கூட்டத்தை கலைக்குமாறு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் போராடும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால், அதற்கு விவசாயிகள் மறுத்துவிட்டனர்.
2. சட்டவிரோதமான வழிகளில் தொல்லை செய்யும் அல்லது தடையை ஏற்படுத்தும் நபர்கள், பொருட்கள் அல்லது கட்டடத்தை நீக்க, தொடர்புடைய மாவட்ட நிர்வாகத்துக்கு இந்தச் சட்டப்பிரிவு அதிகாரம் வழங்குகிறது.
3. "பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து போராடும் விவசாயிகளை தாக்குவதற்காக வந்துள்ளனர். இங்கு போராட்டம் நடத்துபவர்கள் சுடப்பட்டால், காவல் துறைதான் அதற்கு பொறுப்பு," என்று காசிப்பூரில் போராடிவரும் பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ் திகைத் அழுதுகொண்டே கூறினார்.
4.இதனிடையே அங்கு அதிகமான எண்ணிக்கையில் டெல்லி காவல்துறையினர், உத்தரப் பிரதேச காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர்.
5.ராகேஷ் திகைத் கண்ணீர்விட்ட காணொளி உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வைரலாகப் பரவியது. இதனால் வியாழன் இரவு முதல் போராட்டம் நடந்துவரும் பகுதிகளில் அதிக எண்ணைக்கையில் விவசாயிகள் குவியத் தொடங்கினர்.
6. காசிப்பூர் எல்லையில் பதற்றமான சூழல் உண்டான பின்பு டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைப் பகுதிகளிலும் வியாழன் இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது தொடங்கியது.
7. இணையதளம் மற்றும் செல்பேசி சேவைகளும் டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைகளில் இயங்காததால், இந்தப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு செய்திகள் வந்து சேர்வது மிகவும் மெதுவாகவே இருக்கிறது. இதனால் இங்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்று அங்குள்ள விவசாயிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
8. குடியரசு நாள் டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்ட சமயத்தில் செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றியதற்காக பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை குருநாம் சிங் உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும் கடுமையாக விமர்சித்தனர். தீப் சித்து மத்திய அரசின் தரகர் என்று பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநில தலைவர் குருநாம் சிங் சதுனி கூறினார்.
9. சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் , உள்ளூர்வாசிகள் என்று சொல்லக்கூடியவர்கள் சிலர் தங்களின் இடம் காலி செய்யப்பட வேண்டும் என்று கூறி வெள்ளி மதியம் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் உண்டானது.
10.இந்த கும்பல் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று கூறும் காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்று வருகிறது. இதன்போது அங்குள்ள காவல்துறையினர் சிலரும் காயமடைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ஷியாமளா கோபாலன்: கமலா ஹாரிஸின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எவ்வாறு?
- இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 35 சதவீதம் குறைந்தது – காரணம் என்ன?
- கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி நோவாவேக்ஸ்
- இந்திய பட்ஜெட் 2021: உங்களது நிதி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்














Click it and Unblock the Notifications