அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்... சிபிஐயிடம் ஒளிந்து விளையாடும் கிறிஸ்டியன் மைக்கேல்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் லஞ்சம் வாங்கிய கிறிஸ்டியன் மைக்கேல் எங்கே இருக்கிறார் என துபாய் அரசு இன்னும் கூறவில்லை என்று சிபிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் லஞ்சம் வாங்கிய கிறிஸ்டியன் மைக்கேல் எங்கே இருக்கிறார் என துபாய் அரசு இன்னும் கூறவில்லை என்று சிபிஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இவரை இந்தியா கொண்டு வர சிபிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சி நிறைய ஊழல் புகாரில் சிக்கியது. இதில் மிக முக்கியமானது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் இந்த ஒப்பந்தம் 2014ல் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பணம்
மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை ரூபாய் 3600 கோடிக்கு வாங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதில் பல்வேறு அதிகாரிகளுக்கு 430 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

கிறிஸ்டியன் மைக்கேல் லஞ்சம்
இதில் அதிகம் லஞ்சம் வாங்கியது கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்று கூறப்படுகிறது. இடைத்தரகரான இவர் தற்போது துபாயில் உள்ளார். இவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் இல்லாமல் இன்னும் இரண்டு பேர் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

நாடுகடத்த ஆணை
இந்த நிலையில் இண்டர்போல் உதவியுடன் இவர் துபாயில் கைது செய்யப்பட்டார். இவரை நாடு கடத்தவும் இந்திய அரசு அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில் இவரை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்று துபாய் கோர்ட் அனுமதி அளித்தது.

தகவல் இல்லை
இந்த நிலையில்தான் இவர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார், காணாமல் போய்விட்டாரா, கஸ்டடியில் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை என்றுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications