ஸ்டார் ஹோட்டல்களில் கூட்டம் நடத்த… சொகுசு விமானப் பயணம் செய்ய தடை: சிக்கன நடவடிக்கையாம்

மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு துறைகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக செலவிட கூடாது. அனைத்து மத்திய அரசு துறைகளும் புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது.
உள்நாட்டு விமான பயணத்தின் போது அதிகாரிகள் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு கூட்டங்களை தவிர பிற மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தும் அகில இந்திய வானொலி, அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய அரசு தன்னாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
அரசின் திட்டமிடாத செலவை 10 சதவீதம் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த 2008-09 ஆம் ஆண்டிலும் கடந்த நவம்பர் மாதத்திலும் மத்திய அரசு இது போன்ற சிக்கன நடவடிக்கையை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த சிக்கன நடவடிக்கை அதிகாரிகளுக்கு மட்டும்தானா? அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் கிடையாதா பாஸ்? என்பது யாரோ கேட்பது காதில் விழுகிறதா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications