"இன்னும் எத்தனை காலம்" பிட்சை குறை சொல்லும் ஆஸி.. ஏன் இந்த தோல்வி? புரிந்துகொள்ள மறுக்கும் வீரர்கள்!
ஆஸி. அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
நாக்பூர்: சொந்த மண்ணில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு சாதகமாக பிட்ச் அமைப்பதே மரபாக இருக்கிறது. இந்தியா அணியை சமாளிக்க சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை தயார் செய்யாமல், மீண்டும் மீண்டும் பிட்ச்-ஐ மட்டுமே குறை சொல்லி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 92 ரன்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுருண்டனர்.
மொத்தமாக முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்று அறியாமல் திண்டாடியது கண்கூடாக தெரிந்தது.
முன் காலத்தில் வலிமையாக அணியாக அறியப்படும் ஆஸ்திரேலியா, இந்தியாவில் தோல்வியை சந்தித்தால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று ஒரே வரியில் பதிலை அளிக்கும். ஆனால் இந்தியா அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, ஒருமுறை கூட பிட்ச் பற்றி குறை சொன்னதில்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமே அளிக்கப்படும்.

ஆடுகளங்கள்
அப்போது இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது ஒன்றும் புதிதல்ல. இங்கிலாந்தில் ஸ்விங் பந்துவீச்சிற்கும், ஆஸ்திரேலியாவில் வேகத்திற்கும், இலங்கையில் சுழலுக்கும் ஏற்றபடியே ஆடுகளங்கள் அமைக்கப்படும்.

வெற்றியின் ரகசியம்
அத்தனை நாடுகளிலும் வெற்றிபெற, சரியான வீரர்களை உருவாக்குவதும், தேவையான வீரர்களை தேவையான ஆடுகளத்தில் பயன்படுத்த வேண்டும். அண்மை காலமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலம் பெற்றிருப்பதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் வெற்றிபெற முடிந்தது.

ஏற்புடையதா?
ஆனால் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப சுழற்பந்துவீச்சாளர்களையும் இந்திய அணி உருவாக்கியது. இதன் காரணமாக மட்டும்தான் இந்திய அணியால் வெற்றிகளை ஈட்ட முடிகிறது. ஆனால் தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டும் வென்றுவிட்டு, வெளிநாடுகளிலும் தங்களுக்கு சாதகமாகவே பிட்ச்சினை கேட்பது ஏற்புடையதா என்பது ஆஸ்திரேலியர்களுக்கு வெளிச்சம்.

இந்தியா வெற்றி
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று அறிந்துள்ள ஆஸ்திரேலியா அணியால், இத்தனை ஆண்டுகளாக சுழலை எதிர்கொள்ளக் கூடிய பேட்ஸ்மேன்களை உருவாக்க முடியவில்லை. அதுதான் ஆஸ்திரேலியாவின் பிரச்சினையே அன்றி, பிட்ச் பிரச்சினையல்ல. எப்படியும் இந்தத் தொடரை இந்திய அணி வெற்றிபெற போகிறது என்பதை ரசிகர்கள் கணித்துவிட்டனர்.

பயிற்சியும் திட்டமும் அவசியம்
அதனால் இனிவரும் போட்டிகளிலாவது சுழலுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு ஆஸ்திரேலியா செயல்பட வேண்டும். அஸ்வின் போன்றவரை அழைத்து பயிற்சி செய்தாலும் சரி, அஸ்வினையே அழைத்து பயிற்சி செய்தாலும் சரி, சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள சரியான பயிற்சியும் திட்டமும் அவசியம். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் 11 பேர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதன் மூலமாக ஆஸி.யிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications