ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விலங்குகள் நல வாரியம் அந்தர் பல்டி- வழக்கு வாபஸாகிறது!
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளது.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

கடும் அதிர்ச்சி
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வாபஸ் பெற உத்தரவு
தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு இல்லை
இதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications