வி.எச்.பி.யின் அயோத்தி யாத்திரைக்குத் தடை- 350 பேர் கைது- 2000 போலீஸ் குவிப்பு
அயோத்தி: அயோத்தியில் மயான அமைதி காணப்படுகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 350 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.. காரணம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்துவதாக அறிவித்துள்ள யாத்திரைக்கு போலீஸார் தடை விதித்துள்ளதால்.
கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேபோல ஒரு யாத்திரையை விஎச்பி அறிவித்தது. இதையடுத்து அவர்களை உ.பி. அரசு கடுமையாகப் போராடி அடக்கியது. பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அயோத்தியில் பெரும் பதட்டம் நிலவியது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு யாத்திரையை விஎச்பி அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த யாத்திரைக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது. 350க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தி முழுவதும் 2000 போலீஸார் வரை குவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. யாரும் நகருக்குள் நுழைந்து விட முடியாதபடி அரண் போல போலீஸார் நிற்கின்றனர்.
பாபர் மசூதி - ராம்ஜென்மபூமி இடத்தில் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தி்ல சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி இந்த யாத்திரைக்கு விஎச்பி அழைப்பு விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 350 பேரில் 42 பேர் சின்னதும், பெரியதுமான தலைவர்கள் ஆவர். அவர்களை போலீஸார் வீட்டு்க் காவலில் வைத்துள்ளனர். 2000 அதிரடிப் படை காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று சரத் பூர்ணிமா தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராட வருவார்கள். எனவே அவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில்தான் போலீஸாருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உ.பி. வருகிறார் மோடி
இதற்கிடையே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை உ.பியில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். நாளை கான்பூரில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பேசவுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications