அயோத்தி ராமர் கோவில்.. பல தலைமுறை பேசும் வரலாறு.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா?
அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பல ஆண்டு கனவு நிறைவேறப்போகிறது. இந்த கோவில் கட்டுமானப்பணிகளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. யாரெல்லாம் அதிக நன்கொடை கொடுத்துள்ளனர் என்று பார்க்கலாம்.
ராமஜென்ம பூமியான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலையை வரும் 22ஆம் தேதி பிரதமர் மோடி நிறுவ உள்ளார். விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான். ஐஐடி வல்லுநர்கள், டாட்டா குழுமம் மற்றும் எல் அண்ட் டி சிறப்பு பொறியியல் வல்லுநர்கள் இந்தக் கட்டுமான பணிக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மூலம் ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ள கோவில் மட்டுமே 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், பிப்ரவரி 5, 2020 முதல் மார்ச் 31, 2023 வரை, கோயிலை உருவாக்க ரூ. 900 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறினார். அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் இன்னும் ரூ.3,000 கோடிக்கு மேல் உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயில் கட்டுவதற்காக 1800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் இந்த கோயிலில் வந்து தரிசனம் மேற்கொள்ளும் அளவிற்கு கட்டப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் கட்டுமானம் குறித்து ரூர்க்கியில் உள்ள CSIR-Central Building Research Institute (CBRI) இயக்குநர் பேராசிரியர் ராமஞ்ச்ரலா பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் பேசும் போது, மற்ற கட்டுமான பொருட்களை விடக் கற்களின் ஆயுள் அதிகம் என்பதால் நாங்கள் கற்களைப் பயன்படுத்தினோம் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் வலிமையான கட்டிடக்கலையைப் பறைசாற்றும் விதத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தவில்லை. கூடுதலாகக் கோயில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டப்பட்டு உள்ளது " என்று கூறியுள்ளார். அதேபோல் இக்கோவில் தனித்துவமான கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோயிலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கல்லிலும் பள்ளம் வெட்டப்பட்டு பிறகு அந்த பள்ளத்தில் மற்ற கற்களைப் போட்டுக் கட்டியுள்ளனர்.
ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன. கருவறைக்கு ராம் லாலாவின் சிலை வந்து விட்டது. 22ஆம் தேதியன்று மோடியின் கைகளால் பால ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான விவிஐபிக்கள் அயோத்திக்கு வர உள்ளனர். ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. விமான நிலையம் சர்வதேச தரத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நகரத்திற்குள் நுழையும்போதே மக்களை வரவேற்பது போல் எல்லா கட்டடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ராமர் உருவம் தாங்கிய காவிக் கொடிகள். பிரதான சாலையின் நடுவே ராமாயணக் கதாபாத்திரங்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளின் சந்திப்பில் அலங்காரச் சின்னங்கள், விளக்குகள் என ராமர் கோவிலுக்குச் செல்லும் 13 கி.மீ நீளமுள்ள நகரத்தின் பிரதான சாலையான 'ராம் பத்' மெருகூட்டப்பட்டுள்ளது.
ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இன்னும் கோவில் முழுவதும் முழுமையாக கட்டப்படவில்லை என்றாலும் பால ராமர் சிலை கருவறையில் நிறுவப்பட உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் டிசம்பர் 2024 க்குள் தயாராகிவிடும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரத்திற்கு பல ஆயிரக்கணக்காக மக்கள் வருகை தருவார்கள் என்பதால் உள்ளூர் மக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications