அயோத்தி தீர்ப்பு.. இங்கெல்லாம் இன்று இன்டர்நெட் சேவைகள் இருக்காது.. அரசு நடவடிக்கை
Recommended Video
அயோத்தி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரலாறு கொண்ட இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் காலை 10.30 மணிக்கு மேல் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

இதையடுத்து அனைத்து சமூகப் பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் என்று தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அனைத்து மாநில காவல்துறையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இணையதள சேவையை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வழியாக போலி செய்திகளையும், பதற்றத்தை உருவாக்கும் தகவல்களையும் சிலர் பரப்பலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் இன்று இணையதள சேவை முடக்கம் செய்துள்ளனர்.
அயோத்தி மாவட்டத்திற்கு இணையதள சேவை 24 மணி நேரத்துக்கு கிடையாது. இதேபோல உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இணையதள சேவை இருக்காது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இணையதள சேவை இருக்காது.
உத்தர பிரதேச மாநில போலீசாரை பொருத்தளவில், லக்னோ, அலிகார், ஆக்ரா, மொராதாபாத், வாரணாசி, கோரக்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்ப்பூர் மாவட்டத்திலும், இன்று காலை 6 மணி முதல் நாளை வரை இணையதள சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களில் பொருத்தளவில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஒரே மாநிலமாக பாஜக ஆளும் கர்நாடகா விளங்குகிறது. பிற தென் மாநிலங்களில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications