வங்கதேச போர்க்குற்றவாளிக்கு தூக்கு: உஷார் நிலையில் அஸ்ஸாம், மேற்கு வங்கம்
டெல்லி: வங்கதேசத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் மதியுர் ரஹ்மான் நிஸாமி மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் மதியுர் ரஹ்மான் நிஸாமி(71) மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்ட போரில் அவர் பல குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான 16 போர்க்குற்றங்களில் 8 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அவரை சாகும் வரை தூக்கிலிட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் மேற்கு வங்கத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று மத்திய புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஒரு கிளையான ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பால் பிரச்சனை ஏற்படலாம் என்று புலனாய்வுத் துறை மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில போலீசாரை எச்சரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் செயல்படும் தங்களின் திட்டங்கள் தகர்க்கப்பட்டுள்ளதால் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பினர் ஏற்கனவே கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த மரண தண்டனை தீர்ப்பால் அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications