கொட்டிய மழையால் அக்கப் "போர்".. வாளை வீசி விட்டு "கிரிக்கெட்"டுக்குத் தாவிய பாகுபலி டீம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் மழையால் பாதிக்கப்பட்டு விட, போரில் கத்திச் சண்டை போட வேண்டிய அனைவரும் படக்குழுவினரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

பிரம்மாண்டம், வசூலில் சாதனை, கூடவே 'கட்டப்பாவைக் கொன்றது யார்?' என்ற கேள்வி எனப் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வேகமாகத் தயாராகி வருகிறது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகுபலி2ம் பாகத்தின் போர்க் காட்சிகளை பிரம்மாண்டமாக படம் பிடித்து வருகிறார் அதன் இயக்குநர் ராஜமௌலி.

முன்னதாகவே திட்டமிட்டு, ஒத்திகை பார்த்து, மிகவும் பிரம்மாண்டமான போர் சண்டைக் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சண்டைப் பயிற்சியாளர்களைக் கொண்டு இந்தக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், படப்பிடிப்பின் கடைசி நாளில் திடீரென மழை குறுக்கிட்டு விட்டது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. இதனால் படக்குழுவினர் வேறு ஒரு ஐடியா செய்தனர். அதாவது படப்பிடிப்பு இல்லை என அனைவரும் கலைந்து போகாமல், உடனடியாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டனர்.

இதனை வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+