பத்ரிநாத்- கேதார்நாத்தில் இனி இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை.. பாஜக மூத்த தலைவர் அறிவிப்பு
டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் (Badrinath Kedarnath) உள்ளிட்ட புனித ஆலயங்களில் இந்துக்களைத் தவிரப் பிற மதத்தினர் நுழையத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கமிட்டி நிர்வாகம் இது குறித்து அறிவித்துள்ள நிலையில், அடுத்து நடக்கும் கோயில் கமிட்டி கூட்டத்தில் இது தொடர்பான மசோதா தாக்கலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்துக்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களில் முக்கியமானது சோட்டா சார் தாம் யாத்திரை! இமயமலையில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களைத் தரிசிக்கும் யாத்திரையே இது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பக்தர்கள் இந்தப் புனித யாத்திரைக்குச் செல்கிறார்கள்.

இந்துக்கள் அல்லாதோருக்குத் தடை
இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது கட்டுப்பாட்டில் வரும் 45 கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழையத் தடை விதிப்பதாக இன்று அந்த கமிட்டி அறிவித்துள்ளது. கோயில் கமிட்டியின் தலைவர் மற்றும் மூத்த பாஜக தலைவரான ஹேமந்த் திரிவேதி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர், "தேவபூமியான உத்தரகாண்ட்டின் மத மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பது மிக முக்கியம்" என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பான தீர்மானம் BKTC-யின் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திரிவேதி குறிப்பிட்டார்.
பாரம்பரியம்
இந்தக் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதோர் பொதுவாக நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்பது பாரம்பரியம் என்றும் ஆனால், பாஜக அல்லாத அரசுகள் ஆட்சியில் இருந்தபோது இந்த நீண்டகால மரபுகள் மீறப்பட்டதாக ஹேமந்த் திரிவேதி குற்றம் சாட்டினார். கோயில்களின் புனிதத்தன்மையையும், பழமையான சடங்குகளையும் உறுதிப்படுத்த, கோயில் கமிட்டி இனி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றும் மாநில அரசின் நடவடிக்கையையும் திரிவேதி பாராட்டினார். இது உத்தரகண்ட்டின் மத அடையாளம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கை என்றார். உத்தரகாண்ட் கோயில்களின் புனிதத்தன்மையையும் பாரம்பரியத்தையும் இது பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
அதேநேரம் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களைக் குழப்பவும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவுமே பாஜக அரசு இதைச் செய்வதாகவும் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தாஸ்மானா சாடியுள்ளார். இது தொடர்பாக அவர், "இந்துக்கள் அல்லாதோர் இந்தக் கோயில்களுக்கு வருவதில்லை.. அப்படியிருக்கும்போது இதுபோன்ற தடை அவசியமில்லை. மாநிலத்தின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக இதைச் செய்கிறார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.
புனிதத் தலங்கள்
எதிர்ப்புகள் வந்தாலும் கூட அடுத்து நடைபெறவிருக்கும் கோயில் கமிட்டி குழு கூட்டத்தில், இது தொடர்பான முக்கிய மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. குளிர்காலம் காரணமாக பத்ரிநாத் கோயில் கடந்த நவம்பர் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்த கோயில் வரும் ஏப்ரல் 23ம் தேதி மீண்டும் திறக்கப்படும். அதேபோல கேதார்நாத் கோயிலும் கூட எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு மகா சிவராத்திரி அன்று வெளியாகவுள்ளது..
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தவிர்த்து, சோட்டா சார் தாம் யாத்திரையின் மற்ற இரண்டு புனிதத் தலங்களான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களும் அக்ஷய திரிதியை நாளான ஏப்ரல் 19 அன்று திறக்கப்பட உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications