குஜராத் கலவரத்தில் மோடியை தொடர்புபடுத்தி கைதான தீஸ்தா செதல்வாட்.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு அப்போதைய மாநில முதலமைச்சராக பணியாற்றிய தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய காரணம் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியதாக பிரபல சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லையெனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் (Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். தற்போது அவர்களின் ஜாமீன் மனுகள் தள்ளுபடியாகியுள்ளன.

2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து குஜராத் மாநிலம் முழுவதும் மோதல்கள் வெடித்தன. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார்.
இதுதொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய முதலமைச்சர் மோடி உள்பட 64 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி மற்றும் சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு விடுதலை வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்பி ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவையடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை தொடங்கினர். அதாவது டீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி மும்பையின் ஜூஹூவில் உள்ள தீஸ்தா செதல்வாட் வீட்டுக்கு குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று அவரை கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனது சிறை தண்டனையை எதிர்த்து இருவரும் குஜராத் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications