For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாமில் ஆதிவாசிகள் படுகொலை - போடோ தீவிரவாத இயக்கத்தின் மீதான தடை 5 ஆண்டுக்கு நீடிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அஸ்ஸாமில் அப்பாவி ஆதிவாசிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி படுகொலை செய்த போடோ தீவிரவாத இயக்கம் என். டி.எஃப்.பி (எஸ்) மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போடோ இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

Ban on NDFB (S) extended for 5 years

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போடோ தீவிரவாத இயக்கத்தின் மீதான தடையை சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Ban on NDFB (S) extended for 5 years

போடோ தீவிரவாத இயக்கங்களுக்கு 2002-ல் முதலில் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது இந்த தடை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Government has extended the ban imposed on NDFB (S), the Bodo militant group responsible for the killing of more than 70 people in Assam this week, by five more years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X