பெங்களூர் மொய் விருந்தில் ரூ.40 லட்சம் வசூல் செய்த கெஜ்ரிவால்
பெங்களூர்: பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய மொய் விருந்தில் ரூ.40 லட்சம் வசூல் ஆனது.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய நகரங்களில் மொய் விருந்து நடத்தி வருகிறார். இந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டால் ஒரு பிளேட் உணவு வெறும் ரூ.20 ஆயிரம் மட்டுமே. ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சியின் மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விருந்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் ரூ.40 லட்சம் வசூலானாது.
விருந்து நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கெஜ்ரிவால் கூறியதாவது,
டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளபோது இவர் எதற்காக இங்கு விருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார் என்று நீங்கள் வியக்கலாம். டெல்லியில் நடப்பது நாட்டின் பிற பகுதிகளில் பிரதிபலிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
சனிக்கிழமை டெல்லியில் பாஜக பேரணி நடத்தியது. கூட்டத்திற்கு 1 லட்சம் பேர் வருவார்கள் என்றார்கள். ஆனால் 30 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வந்தனர். 2 ஆயிரத்து 500 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பேருந்துக்கு 12 பேர் தான் வந்துள்ளனர். அவர்களின் பேச்சில் இருந்தே அவர்கள் பயத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.
நாங்கள் ஆட்சி செய்த 49 நாட்கள் பற்றி பாஜக ஒரு குறை கூட தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்தோம் என்று பாஜகவே நினைக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications