பெங்களூர் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஹெலிகாப்டர் சேவை! பயணிகளுக்கு நல்ல சேதி
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்ததுவர ஹெலிகாப்டர் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.
பெங்களூர் நகரின் வடக்கு பகுதியில் நகரை விட்டு தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்.
தெற்கு பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி, தென்கிழக்கு பகுதியிலுள்ள எச்ஏஎல் விமான நிலைய பகுதியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல அரசு ஏசி பஸ்கள் அல்லது சொந்த வாகனங்கள் அல்லது வாடகை கார்களைதான் பயணிகள் நம்ப வேண்டியுள்ளது.

பயணிகளுக்கு தொந்தரவு
இந்த பகுதிகளில் இருந்து ஏர்போர்ட் செல்ல குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ஒருவர் சென்னை செல்ல பெங்களூர் விமான நிலையம் செல்லும் நேரத்திற்குள், காரில் அதே நபர் வேலூரை தாண்டிவிடலாம். இதுதான் யதார்த்தம்.

ஹெலிகாப்டர் சேவை
இந்த நிலையை கருத்தில் கொண்டு ஹெலிகாப்டர் சேவை துவங்க பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அப்படி ஒரு நிறுவனம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் ஹெலிகாப்டர் சேவையை துவக்க உள்ளது. பெல் நிறுவனத்தின் 407 வகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் 15 நிமிடங்களில் விமான நிலையத்தை சென்றடைய முடியும்.

முக்கிய நேரங்களில் இயக்கம்
காலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை ஒரு ஷிப்ட் என்றும் மாலை 3 மணி முதல் 6.15 மணிவரை மற்றொரு ஷிப்ட் என்றும் தலா 3 ரவுண்டுகள் இயக்கப்பட உள்ளன. ஒரு ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 6 பேர் பயணிக்க முடியும். 15 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கும் மேல் லக்கேஜ் என்றால் தரைமார்க்கமாக கொண்டு வந்து பயணியிடம் சேர்க்கப்படும். அதற்கு கூடுதல் கட்டணம் உண்டு. ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு பயணிக்கு ரூ.4130 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைக்கு செல்வந்தர்களும், அவசரமாக செல்ல வேண்டியவர்களும் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

செல்போன் ஆப்
படிப்படியாக ஒய்ட்பீல்டு உள்ளிட்ட பல இடங்களிலும் ஹெலிசர்வீஸ் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. HeliTaxii ஆப்பில் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். சென்னையிலும் இதுபோன்ற ஹெலிகாப்டர் சேவை துவங்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் அல்லவா. ஆனால் டிக்கெட் ரேட் குறைக்கப்பட்டால், கார் வாடகையை ஒப்பிட்டால் இது லாபகரமாக இருக்கும் என்பதே பெங்களூர்வாசிகள் கருத்தாக உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications