நுரை தள்ளிக் கிடக்கும் பெங்களூர் பெல்லந்தூர் ஏரி: கை கழுவிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
பெங்களூர்:பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக அப்பகுதி மக்கள் அதிக அளவில் துவைக்கும் பவுடர் மற்றும் சோப் தான் காரணம் என கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பெல்லந்தூரில் இருக்கும் ஏரி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் ஏரி முழுவதும் வெள்ளை நுரையாக உள்ளது. ஏரி மாசுபட தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் தான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் பெல்லந்தூர் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஏரியில் நுரை பொங்குவதற்கு தொழிற்சாலை கழிவுகள் அல்ல மாறாக அப்பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் துவைக்கும் பவுடர் மற்றும் சோப் ஆகியவை தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ராமசந்திரா கூறுகையில்,
ஏரிக்கு அருகில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் 4 கிலோ டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்து. இந்த டிடர்ஜென்ட் கலந்த நீர் ஏரியில் கலக்கும்போது நுரை உண்டாகுகிறது. ஏரி எப்படி மாசுபட்டது என்பது குறித்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications