For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதியானாலும் நிற்க வேண்டும்... ஆம்புலன்சிற்கு வழிவிட்ட எஸ்ஐக்கு குவியும் பாராட்டுகள்!

ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவர் கான்வாயை நிறுத்திய சப் இன்ஸ்பெக்டர், கடமை தவறாத போலீசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

பெங்களூரு : ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவர் சென்ற கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீசாருக்கு உயரதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டியுள்ளனர்.

கடந்த சனின்கிழமை பெங்களூருவில் மெட்ரோ ரயில் வேசையை துவக்கி வைக்கும் பணிக்கா குடியரசுத் தலைவர் பெங்களூரு வந்திருந்தார். அப்போது அவரது கான்வாய் என்று சொல்லப்படும் பாதுகாப்பு வளைய வண்டி ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தது.

Bangalore SI turns as the superhero while stopeed the President convay and pave way for ambulance

குடியரசுத் தலைவர் வருகையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா ஈடுபட்டிருந்தார்.

டிரினிட்டி சர்க்கிள் பகுதியிலேயே தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கான்வாய் வந்த போது சன் இன்ஸ்பெக்டர் திடீரென வாகனத்தை நிறுத்தினார்.

திடீரென கான்வாய் நிற்கவே என்ன ஆனது என்று தெரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் குழம்பிப் போக மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதிகாரிகள் வரும் போது தான் தனது கடமையை சின்சியராக செய்வதாக நினைத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளார் நிஜலிங்கப்பா. அவரின் செயலை பாராட்டி உயரதிகாரிகள் பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

English summary
Traffic subinspector at Bangalore rewarded by police officials for stopping President's car to pave way for ambulance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X