மதிய உணவில் பல்லி விழுந்தது... பார்த்த அதிர்ச்சியிலேயே 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
பெங்களூர்: உணவில் பல்லி விழுந்ததை பார்த்த அதிர்ச்சியிலேயே பெங்களூர் பள்ளி மாணவிகள் மூன்று பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பெங்களூரை அடுத்த ராமநகர் மாவட்டம் கும்பலுகூடு அருகே கூலிக்கெரே கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றிற்கு நேற்று மதியம் தொண்டு நிறுவனம் ஒன்று மதிய உணவு வழங்கியது. உணவை மாணவ-மாணவிகளுக்கு பரிமாற எடுத்து வந்த போது, எதிர்பாராதவிதமாக சுவரில் நின்ற ஒரு பல்லி உணவில் விழுந்து விட்டது.
திடீரென பல்லி துள்ளி உணவில் விழுந்ததைக் கண்டு அங்கு உணவருந்த அமர்ந்திருந்த மாணவிகள் அலறினர். இந்நிலையில், அங்கிருந்த 3 மாணவிகளுக்கு வாந்தியும், மயக்கமும் உண்டானது.
உடனடியாக அம்மூன்று மாணவிகளும் மருத்துவமனை அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது. பல்லி விழுந்ததைப் பார்த்த அதிர்ச்சியிலேயே அவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் உண்டானதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் அம்மாணவிகள் பத்திரமாக வீடு திரும்பினர்.
உணவில் பல்லி விழுந்ததை முன்கூட்டிய்யே பார்த்து விட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதிய உணவு சாப்பிட இருந்த நேரத்தில் பல்லியால் உண்டான களேபரத்தால் அப்பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications