பெங்களூரு: தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்ட ஐ.டி நிறுவன ஊழியர்
பெங்களூரு: பெங்களூருவில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோவில் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அவரது மரணத்திற்குப்பின்னர் அந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷ் சவுத்ரி (27). மென்பொருள் பொறியாளரான இவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் ராஜேஷை சமாதானப்படுத்தி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதை ஏற்காத ராஜேஷ்,சிக்சந்திரா அருகே உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனர். சுமார் 8.30 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், அவருடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜேஷின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர்.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போது, ராஜேஷை காப்பாற்றுவதற்காக நான்காவது மாடியை மீட்பு படையினர் நெருங்கினர். இதனை கவனித்த ராஜேஷ், வேகமாக ஓடிவந்து கீழே குதித்தார். கீழே இருந்தவர்கள் வலையை விரித்திருந்தபோதும் அவரைப் காப்பாற்ற முடியவில்லை. கீழே விழுந்து படுகாயம் அடைந்த ராஜேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் தோல்வி காரணமாகவோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ ராஜேஷ் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என அவரது உறவினர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். எனவே பணி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக 4வது மாடியில் இருந்து வீடியோவாக படம் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார் என்பதுதான் சோகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications