வங்கிகளில் இன்று முதியவர்கள் மட்டுமே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் !
முதியோர்கள் மட்டுமே நாளை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என வங்கிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இன்று முதியவர்கள் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும் மற்ற பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ரூ2.5 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தங்களது பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும் எனவும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒருநாள் மற்றவர்கள் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வங்கிகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே பணம் மாற்றித் தரப்படும் எனவும், மற்ற வங்கி பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் இந்திய வங்கிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications