எனது வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை.. சொல்கிறார் விஜய் மல்லையா !
டெல்லி: இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர் மல்லையா தன் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்து கணக்கை வருகிற 21-ந்தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தும் அவரது திட்டத்தையும் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் விஜய் மல்லையா சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.
வங்கிகள் தனக்கு கடன் வழங்கும் போது வெளிநாட்டில் தனக்கு உள்ள சொத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், எனவே தற்போது தன் வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications