முதல் தவணையாக ரூ.4000 கோடி.. மல்லையா கோரிக்கையை நிராகரித்தன வங்கிகள்!
டெல்லி: வங்கிக்கடனில் ரூ.4000 கோடியை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் திருப்பியளிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா கோரிக்கை விடுத்த நிலையில், இதை ஏற்க வங்கிகள் மறுத்துவிட்டன.
எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் விஜய் மல்லையா ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார். மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வங்கிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கடந்த மாதம் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மல்லையா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். செப்டம்பர் மாதத்திற்குள், வங்கிக்கடனில் ரூ.4000 கோடியை திருப்பி அனுப்ப மல்லையா சம்மதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மல்லையாவுக்கு எதிராக மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இங்கு மீடியாக்களின் விசாரணைதான் நடக்கிறது. இப்போது மீடியாக்கள் உருவாக்கி வைத்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே, மல்லையா நாடு திரும்ப விரும்பவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து, மல்லையாவின் உறுதி மொழி குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வங்கிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது. மேலும், மீடியாக்கள் மல்லையா வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறுதான் செய்தி வெளியிட்டன. இதற்காக குற்றம் சொல்ல முடியாது என்றும் கோர்ட் கூறிவிட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், மல்லையாவின் கோரிக்கையை தாங்கள் ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இதனால் கடன் தொகையை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் மல்லையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 21ம் தேதிக்குள், மல்லையா தனது சொத்து, மனைவி, குழந்தைகளின் பெயரிலுள்ள சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications