தலித்துகள், பழங்குடியினரை கோயிலுக்குள் அனுமதிக்காவிட்டால் கடும் தண்டனை: சட்டம் நிறைவேறியது
டெல்லி: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக லோக்சபாவிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு சட்டம் அமலுக்கு வர உள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவி ல் தாக்கல் செய்யப்பட்டு எந்த விவாதமும் இன்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளின்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, பாலியல் எண்ணத்தோடு பெண்களைத் தொடுவது, பாலியல் சார்ந்த வார்த்தைகளையும் சைகைகளையும் தெரிவிப்பது, அந்தப் பெண்களை கோயில்களுக்கு தேவதாசிகளாக ஒப்படைப்பது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், செருப்பு மாலைகள் அணிவிப்பது, சடலங்களை அப்புறப்படுத்துமாறோ அல்லது மனித மலங்களை அள்ளுமாறோ கட்டாயப்படுத்துவது, அந்த மக்கள் மீது சமூகம், பொருளாதாரம் சார்ந்த தடைகளை விதிப்பது, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சட்டவிரோதமாக மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகளும் கடுமையான குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்குப் பணியாற்ற மறுக்கும் பிற சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலித் அல்லது பழங்குடியின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இச்சட்டம் வகை செய்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications