'மதுபான பார்' மீண்டும் திறக்கப்படும்... கேரள நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் அறிவிப்பு
மீண்டும் கேரளாவில் மதுபான பார்கள் திறக்கப்படும் என்று அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் மூடப்பட்ட மதுபான பார்கள் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் முதல்வர் உம்மன் சாண்டி, அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் மதுவே இல்லாத நிலை உருவாகும் அதற்கு முதல்படியாக 100 மதுபான பார்கள் மூடப்படுகின்றன என்று கூறியிருந்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவில் மதுபான பார்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இடது முன்னணி கேரளாவின் ஆட்சியில் அமர்ந்தது. இதனையடுத்து, அரசுக்கு சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும், அதற்கு அடிப்படையான காரணம் மதுபான பார்கள் மூடப்பட்டதே அதனால் அவற்றை விரைவில் திறப்போம் என்று கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் கோரியுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் அரசு, மதுவில்லா கேரளா 2023 என்ற இலக்கை மையமாகக் கொண்டு 700 மதுபான பார்களை முடியாது. மேலும் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட இந்தியா முழுமைக்கும் உத்தரவிட்டது.
கேரளாவில் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்தரங்குகள், மீட்டிங்குகள் இலங்கைக்கும் கோவாவுக்கும் சென்றுவிட்டதால் சுற்றுலா வருமானம் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இதனால் கேரள மாநில அரசின் முக்கிய துறையான சுற்றுலாத்துறையின் வருமானம் சுமார் 5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனால் மீண்டும் சுற்றுலா துறை வருமானத்தை பெறவேண்டுமானால் சுற்றுலா தளங்களில் உள்ள மதுபான பார்கள் மீண்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications