ஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை… 40 நாடுகளை சேர்ந்த் 9,292 பெண்கள் கலந்து கொண்ட 'பதுக்கம்மா விழா'
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகை, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்த விழாவில் ஒரே இடத்தில் அதிக அளவிலான பெண்கள் கூடியதற்காக அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நவராத்திரியின் போது, தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா பண்டிகை கொண்டாடப்படும். அப்போது, ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர். பின்னர் அதை, பொது இடத்தில் வைத்து, சுமங்கலி பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர்.

நவராத்திரி விழாவின், எட்டாவது நாளில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகையை அரசு விழாவாக கடந்த ஆண்டு தெலுங்கானா அரசு அறிவித்தது. இந்த ஆண்டு பதுக்கம்மா பண்டிகை ஹைதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
கின்னஸ் சாதனைக்காக அரசு சார்பில் 20 அடி உயரமுள்ள பதுக்கம்மா ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். அதன் முன், 9,292 பெண்கள், இரண்டு மணி நேரம் கும்மி அடித்து, ஆடி, பாடி, கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் நடனத் திருவிழாவில் 5,015 பெண்கள் கலந்துகொண்டிருந்ததே சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் சந்துலால் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications