லோதா கமிட்டியை அமல்படுத்தாத வழக்கு ஒத்தி வைப்பு.. பிசிசிஐக்கு தற்காலிக நிம்மதி!
டெல்லி: பிசிசிஐக்கு எதிராக லோதா கமிட்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ சிறிது நிம்மதி பெருமூச்சு விட முடியும்.
பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது.

இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ள பிசிசிஐ, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று வழக்கு விசாரிக்கப்பட்டது. லோதா கமிட்டி சார்பில் கோபால் சுப்பிரமணியமும், பிசிசிஐ சார்பில் கபில் சிபலும் வாதிட்டனர்.
நீதிபதி தாக்கூர் கூறுகையில், லோதா கமிட்டி சாதாரண ஒரு குழு கிடையாது. அது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு. பிசிசிஐக்கு சந்தேகம் இருந்தால் அந்த குழுவிடம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் வாக்களித்துள்ளன.
இவ்வாறு வாக்களித்த சங்கங்கள் பிசிசிஐ மூலம் கிடைத்த நிதியை திருப்பி வழங்க வேண்டும். இனிமேலும், அந்த சங்கங்களுக்கு நிதி ஒதுக்கப்பட கூடாது. அல்லது, லோதா கமிட்டி பரிந்துரைக்கு அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, லோதா கமிட்டி பரிந்துரைகளை அப்படியே ஏற்க தயாரா என கபில் சிபலை பார்த்து கேட்டார். ஆனால் அடம் பிடிக்கும் பிசிசிஐயின் வழக்கறிஞரான கபில் சிபலோ, அப்படி ஒப்புக்கொள்ள முடியாது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) சுப்ரீம்கோர்ட் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என நீதிபதிகள் கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். வழக்கு மதியம் 2 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென வழக்கு இம்மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தற்காலிகமாக பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications