டைமுக்கு வேலைக்கு வரணும்... ஊழியர்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணிக்கு தாமதமாக வரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அனைத்து தரப்பு ஊழியர்களையும் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது. அதில், ஒவ்வொரு ஊழியரும் எல்லா நேரமும் தங்களது வேலையில் முழு ஈடுபாடு செலுத்த வேண்டும் என்பது பணியாளர்களுக்கான விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வருவதை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட துறை, அமைச்சகங்களின் பொறுப்பாகும்.

Be punctual or face action: Govt warns employees

ஒழுங்கு நடவடிக்கை

உரிய காரணமின்றி தொடர்ந்து காலதாமதமாக அலுவலகம் வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு அனைத்து நிலையில் உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தும்.

2 முறை பெர்மிஷன்

நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இப்போதுள்ள விதிமுறைப்படி, தங்களது உயர் அதிகாரியிடம் உரிய காரணங்களைக் கூறிவிட்டு மாதத்தில் 2 முறை ஒரு மணி நேரம் வரை தாமதமாக வர அனுமதிக்கப்படுகிறது.

அரைநாள் விடுப்பு

அதற்கு மேலும் தாமதமாக வந்தால் அரை நாள் விடுப்பாக (சாதாரண) கருதப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வரவேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+