மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் போட்டியை வேடிக்கை பார்த்த முதியவர் பேட் பட்டு பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிறுவர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக கைநழுவி பறந்து வந்த பேட் பட்டு 58 வயது நபர் பலியாகியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இருக்கும் பகவான்பூர் பிளாக்கில் உள்ளூர் சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. அந்த போட்டியை சஷான்க் மன்னா(58) என்பவர் கண்டு ரசித்துள்ளார்.

சிறுவன் ஒருவர் பந்து வீசியபோது பேட்டிங் செய்த சிறுவன் அதை அடிக்க முயற்சி செய்தார். அப்போது சிறுவனின் கையில் இருந்த பேட் நழுவி பறந்து சென்று மன்னாவின் தலையில் பட்டது. பேட் பட்டவுடன் மன்னாவின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது சக வீரருடன் மோதி காயம் அடைந்த வீரர் அங்கித் கேசரி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications