உடல் நிலை சரியில்லாத கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடுமைக்கார மனைவி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உடல் நிலை சரியில்லாமல் தொடர்ந்து மருத்துவ செலவு வைத்த கணவனுக்கு பணி விட செய்ய முடியாத மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ரகுநாத் கஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஜாகிர் ஷேக், தாரா பீவி தம்பதிகள். தனது மனைவி தாரா பீவியை, ஜாகிர் ஷேக் திருமணமானது முதல் தொடர்ந்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜாகீர் ஷேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சம்பாதித்த பணம் முழுவதும் மருத்துவத்திற்கே செலவானது.இதனால் தாராபீவி தொடர்ந்து மனவேதனைக்கு ஆளானார். பொறுத்து பொறுத்து பார்த்த தாராபீவி ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போனார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
தீ பற்றி எரியவே வேதனையும் வலியும் தாங்க முடியாமல் ஜாகிர் ஷேக் அலறினார். கூப்பாடு போட்டு கதறினார். ஜாகிர் ஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாகிர் ஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாரா பீவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் நிலை சரியில்லாத கணவனை தாலி கட்டிய மனைவியே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications