வாரே வாவ்.. லண்டன் ரயில் நிலையத்தில் வங்க மொழியில் பெயர் பலகை.. மம்தா ஹேப்பி
கொல்கத்தா: உலகின் பழம்பெருமை வாய்ந்த லண்டன் வொயிட்சேப்பல் ரயில் நிலையத்தில் ஆங்கிலத்துடன் வங்காள மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் 1876 ஆம் ஆண்டு வொயிட்சேப்பல் ரயில்நிலையம் வொயிட்சேப்பல் சாலையில் உள்ள டர்வார்ட் வீதியில் அமைக்கப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தில் வங்காள மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என வங்காள மொழி ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்து உள்ளனர்.

லண்டன் ரயில்நிலையத்தில் வங்காள மொழி
இந்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்ற லண்டன் டியூப் ரயில் நிர்வாகம் ஆங்கிலத்துடன் சேர்த்து முகப்பில் வங்காள மொழி பெயர் பலகையை வைத்து இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "வொயிட்சேப்பல் ரயில்நிலையத்தில் வங்காள மொழியில் பெயர் பலகை வைக்க லண்டன் டியூப் ரயில் நிர்வாகம் ஒப்புக்கொண்டு இருப்பது பெருமை அளிக்கிறது.

வங்காள கலாச்சாரத்தின் வெற்றி
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழியான வங்காளம் சர்வதேச அளவில் பெற்று இருக்கும் முக்கியத்துவத்தையும் அதன் வலிமையையும் இது குறிக்கிறது. புலம்பெயர்ந்த வங்காளிகள் கலாச்சார திசைகளில் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதையும் இது கோடிட்டுக் காட்டி உள்ளது. இது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வெற்றியாகும்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சி தெரிவித்த டவர் ஹாம்லட் மேயர்
வங்கதேச அமைச்சர் ஜுனைத் அஹமது, லண்டன் வொயிட் சேப்பல் ரயில் நிலையத்தின் ஆங்கில மொழி பெயர் பலகையுடன் வங்காள மொழி பெயர் பலகை பொறுத்தப்பட்டு இருக்கும் படத்தை பகிர்ந்து இருக்கிறார். லண்டன் பெருநகர டவர் ஹாம்லட் கவுன்சில் ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் பெயர் பலகை வைக்கும் திட்டத்தை முன்னிட்டு அதற்கான நிதியை ஒதுக்கி இருக்கிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள டவர் ஹாம்லட் மேயர் ஜான் பிக்ஸ், "வொயிட் சேப்பல் ரயில் நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது." எனக் கூறியுள்ளார்.

வொயிட்சேப்பல் ரயில்நிலையம்
சுரங்கம் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் லண்டனின் முக்கிய ரயில்நிலையமான இதை தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ராயல் லண்டன் மருத்துவமனை எதிரே அமைந்து இருக்கும் இந்த ரயில் நிலையம் அல்ட்கேட் கிழக்கு மற்றும் ஸ்டெப்னே க்ரீன் ரயில் நிலையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications