For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கியூட் வெஜிட்டேரியனாவாரா பெங்களூர் மாணவர்? பீட்டா நடத்தும் வாக்கெடுப்பில் நீங்களும் பங்கெடுக்கலாமே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கியூட்டான வெஜிட்டேரியன் யார் என்பதை தேர்ந்தெடுக்க பீட்டா அமைப்பு நடத்திய தேர்வில், பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் குஷால் ஹெப்பார் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதி சுற்றில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றியாளரை நிர்ணயிக்க வேண்டும்.

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals), என்பதன் சுருக்கம்தான், 'பீட்டா'. இந்த அமைப்பு, நாடு முழுக்க வெஜிட்டேரியன்கள் மத்தியில் ஒரு போட்டியை நடத்தியது. யார் சிறந்த வெஜிட்டேரியன் என்பதுதான் போட்டியின் சாராம்சம்.

Bengaluru collage student among 20 finalists of Peta contest

செலப்ரட்டிகளை தவிர்த்து யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும். 'India's Cutest Vegetarian Next Door contest' என்று பெயர் சூட்டியிருந்தது பீட்டா.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போட்டியில், ஆண்களில் பத்து பேரும், பெண்களில் பத்து பேரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் பெங்களூரை சேர்ந்த, இறுதியாண்டு, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவரான குஷால் ஹெப்பார் ஒருவர்.

"உடற்கூறு, விலங்குகளை பாதுகாக்க காட்டும் அக்கறை மற்றும் வெஜிட்டேரியனாக இருக்க கூறும் காரணம்.." ஆகிய இம்மூன்று காரணங்கள் அடிப்படையில், பீட்டா ஜட்ஜ் குழு, இந்த பத்து பேரையும் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுத்துள்ளது. குஷால் ஹெப்பார், சிறு வயது முதலே வெஜிட்டேரியன்தானாம். "நான் விலங்குகள் மீது அன்பு செலுத்துகிறேன். அதன் சுவைக்காக, விலங்குகளை சாப்பிடும் 'நான்-வெஜிட்டேரியனாக' இருக்க விரும்பவில்லை" என்பது குஷால் ஹெப்பார் கூறும் கருத்தாக உள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 பேர்களில், பொதுமக்கள் தங்கள் வாக்களிப்பு மூலம், ஆண் மற்றும் பெண் குழுவில் தலா ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக வாக்குகளை பெறும் ஆண் மற்றும் பெண், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். போட்டி முடிவுகள், வரும் நவம்பர் 1ம் தேதி, அறிவிக்கப்படும்.

நீங்களும் உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்யத்தான் செய்யுங்களேன். வாக்களிப்பது ரொம்ப சிம்பிள். இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள், நீங்களே வெற்றியாளரை தேர்ந்தெடுங்கள்.

English summary
Bengaluru collage student Kushal Hebbar has made it to the finals of People for the Ethical Treatment of Animals (Peta) India's Cutest Vegetarian Next Door contest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X