கர்நாடக அதிமுக உட்கட்சித் தேர்தலில் முறைகேடு: ஜெ.வுக்கு பெங்களூரு கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடக அதிமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக அதிமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உள்ளிட்ட 35 பேரும், செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் விளக்கம் அளிக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications