அரிதான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பிரிவு.. நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரில் ஆரம்பம்
பெங்களூர்: நாட்டிலேயே முதல் முறையாக அரிதான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை மையம் பெங்களூர் இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் சைல்ட் ஹெல்த் (Indira Gandhi Institute of Child Health) மருத்துவமனை, பெங்களூர் சாந்திநகர் அடுத்த லக்சந்திரா பகுதியில் அமைந்துள்ளது.

இங்குதான், அரிதான நோய்க்கான சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரிதான நோய் தடுப்பு வார்டு மற்றும் இலவச சிகிச்சையளிக்கும் வசதி 'அரிதான நோய் இந்தியா நிறுவனம் (ORDI)' அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
ஓஆர்டிஐ அமைப்பின் இணை நிறுவனர் பிரசன்ன குமார் கூறுகையில், இது பெரிய விஷயம்தான், ஆனாலும் நோய்களை குணப்படுத்துவதில் சிறு அடிதான் முன் நோக்கி வைத்துள்ளோம். நோய்கள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையும், போதிய பரிசோதனைகளை செய்யாததும்தான் அரிதான நோய்களை குணப்படுத்த முடியாததற்கு காரணம். பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையம், அந்த குறையை போக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூரில் அரிதான நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட பிறகு, அதுபோன்ற அறிகுறிகளுடன் வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அங்கேயே சிகிச்சையளிக்க முடிந்த நோயாளிகளுக்கு அங்கேயும், வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்து மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு அந்த உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications