முதல்ல ஆபீஸ் நேரத்தை மாற்றனும்.. பெங்களூர் டிராபிக் நெரிசலை குறைக்க கர்நாடக அரசு யோசனை
பெங்களூர்: பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க,அலுவலக வேலை நேரத்தை மாற்றி அமைக்குமாறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுக்க இருக்கிறது.
நாட்டின் ஐடி தலைநகரமான பெங்களூரின் டிராபிக் நெரிசலை குறைக்க காவல்துறை எவ்வளவோ முயன்றும் அவை பலனளிக்கவில்லை.
இந்நிலையில் பெங்களூருவில் செயல்படும் ஐ.டி நிறுவனங்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்கவும், தொழிற்சாலைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஒரே நாளில் விடுமுறை அளிக்காமல், வெவ்வேறு நாட்களில் வார விடுமுறை அளிக்குமாறும் கர்நாடக அரசின் சார்பில் அந்நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளது.

திட்ட அறிக்கை
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அம்மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில், இந்த புதிய யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

முதல்வர் அனுமதி
போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், இந்த அறிக்கையை செயல்படுத்துவது குறித்து கர்நாடாக முதல்வர் சித்தராமையாவின் அனுமதியை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐடி நிறுவனங்கள் ஏற்குமா
ஆனால் இந்த கோரிக்கையை ஐடி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது என்றே தெரிகிறது. ஏனெனில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக வேலை செய்யும் ஐடி நிறுவனங்கள்,வெளிநாட்டு நேரத்திற்கேற்ப செயல்பட வேண்டி இருக்கும்.

பள்ளி, கல்லூரிகள்
இதேபோல, பள்ளி, கல்லூரிகள் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தையும், ஒரே சமயத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது கர்நாடக அரசின் திட்டமாக உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications