என்கவுண்டர் செய்வதாக மிரட்டி மனைவியை பலாத்காரம் செய்த எஸ்.பி! பெங்களூர் ஐடி ஊழியர் பரபரப்பு புகார்
Recommended Video

பெங்களூர்: தன்னையும் தனது மனைவியையும் மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்ததாக ஐடி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூர், கோரமங்களாவை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி ரூபா. இவரை ஐபிஎஸ் அதிகாரி பீமசங்கர் எஸ்.குல்ட் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் சுரேஷ்.
மேலும், இதுதொடர்பாக, அவ்விருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை மீடியாக்களுக்கு வெளியிட்டார்.

போட்டோ ஸ்டூடியோ
இதுபற்றி சுரேஷ் கூறுகையில், ரூபா போட்டோ ஸ்டோடியோ நடத்தி வந்தார். தாவணகெரே எஸ்பியாக பீமாசங்கர் பதவி வகித்தபோது, தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியை போட்டோ சூட் எடுக்க ரூபாவை பீமாசங்கர் அணுகினார். அப்போதுதான் ரூபா அறிமுகம் பீமாசங்கருக்கு கிடைத்தது.

என்கவுண்டர் மிரட்டல்
ரூபாவை அடைய வேண்டும் என்பதற்காக, என்னையும், ரூபாவையும் என்கவுண்டர் செய்துவிடுவதாக மிரட்டினார் பீமாசங்கர். இதன்பிறகு ரூபாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இதை பலாத்கார வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுரேஷ்.

வழக்கு பதியவில்லை
ஆனால், இதை பலாத்கார வழக்காக பதிவு செய்யாத போலீசார், செக்ஷன் 497ன்கீழ், புகாரை மட்டும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்பது போலீசாரின் பதில். மேலும் சட்ட வல்லுநர்கள் கருத்தையும் காவல்துறை கேட்டுள்ளது.

மறுக்கும் மனைவி
ஆனால், வழக்கில் முக்கிய திருப்பமாக, சுரேஷின் மனைவி ரூபாவே, இந்த புகாரை மறுத்துள்ளார். பீமாசங்கர் தன்னை மிரட்டவில்லை என்று கூறியுள்ள அவர், சுரேஷ்தான் தன்னை வீட்டில் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், எனவே, தனது கணவரை விட்டு கடந்த சில மாதங்களாக, பிரிந்துதான் வாழ்ந்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications