தெருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்.. 4 பேரை கைது செய்தது பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற இளம் பெண்ணை ஸ்கூட்டரில் வந்த இரு வாலிபர்கள் சேர்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிசிடிவியொன்றில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் லீனோ மற்றும் ஐயப்பா ஆகியோரும், அவர்களுக்கு உடந்தையாக இறுந்ததாக ராஜு மற்றும் சின்னு ஆகிய இருவரும் என மொத்தம், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும், பிரேசர் டவுன் பகுதியில் குடியிருக்கும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், சரக்கு வேன் டிரைவர். இருவர் கூரியர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார்கள். மற்றொருவர் பி.காம் மாணவராகும்.
இதில் இருவர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் டெலிவரி பாயாக பார்ட்-டைம் வேலை பார்க்கிறார்கள். இந்த ரெஸ்டாரண்டிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் அவ்வப்போது ஹோம் டெலிவரி செய்வது வழக்கமாம். அப்போது இந்த வாலிபர்களில் ஒருவர்தான் ஹோம் டெலிவரி செய்ய வீட்டுக்கு வருவாராம். அப்போதுமுதல், அந்த பெண் மீது மோகம் கொண்டு இருந்துள்ளனர்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கொடூர எண்ணத்தை புத்தாண்டு இரவு நேரத்தில் அரங்கேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது இ.பி.கோ 341, 354ஏ, 354பி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications