பதன்கோட் தாக்குதல்: உயிர் தியாகம் செய்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உடலுக்கு இறுதி அஞ்சலி
பெங்களூரு: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், 22 பலியானார். அவருடைய உடல் பெங்களுக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூரு பெல் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிரஞ்சன் உடலுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார். நிரஞ்சனின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பதன்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தேசிய பாதுகாப்பு படை லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்ததால், வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விமான தளத்தில் பதுங்கியிருந்த மேலும் 2 தீவிரவாதிகள் இன்று திடீரென தாக்குதலை அரங்கேற்றினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருவதால், அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க ராணுவத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன், 32 பலியானார்.
நிரஞ்சனின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தொட்ட பொம்மசந்திரா என்ற இடத்தில் வசித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரைவைச் சேர்ந்த அவரது வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டு நிரஞ்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நிரஞ்சனின் மரணம் தங்களுக்கு தாங்க முடியாது இழப்பு என்றாலும் அவர் நாட்டுக்காக உயிர் துறந்ததை நினைத்து பெருமைகொள்வதாக நிரஞ்சனின் சகோதரி தெரிவித்தார்.
நிரஞ்சனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது பூர்வீகம் கேரளா. ஆனால், பின்னர் பெங்களூருவில் குடியேறினர். இவருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இன்று அவரது உடல் பெங்களூர் கொண்டு வரப்பட்டது. லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சனின் உடலுக்கு பெங்களூரு பெல் மைதானத்தில் இறுதி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா நிரஞ்சனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நிரஞ்சனின் பூர்வீகம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலம்பச்சேரி கிராமம் ஆகும். அவரது மனைவிக்கும் அதே ஊர்தான். இறுதிச்சடங்குக்காக நிரஞ்சனின் உடல் அவரது சொந்த ஊரான எலம்பச்சேரி கிராமத்துக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications