பெங்களூருவில் நூற்றில் ஒருவர் கமிஷனரை ஃபாலோ செய்கிறார்களாம்!
பெங்களூரு: பொதுமக்களிடம் நெருங்கி பழகுவதற்காக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தொடங்கிய டிவிட்டர் கணக்கு ஒரு லட்சம் ஃபாலோவர்களை குறைந்த காலத்திலேயே பெற்று அசத்தியுள்ளது.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக எம்.என்.ரெட்டி பதவியேற்ற பிறகு, பொதுமக்களுடன், காவல்துறையை நெருக்கமாக்க தேவைப்படும் முயற்சிகளை எடுத்தார். அதன் ஒரு ஆயுதமாக, டிவிட்டரை கையில் எடுத்தார். @CPBlr என்ற பெயரில் டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கினார்.

இந்த அக்கவுண்ட் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதற்கு காரணம், பொதுமக்கள் எந்த புகாராக இருந்தாலும் டிவிட்டர் வழியாக தெரிவிக்கலாம் என்ற வசதிதான்.
சாலையில் செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டும் பள்ளி டிரைவரை போட்டோ எடுத்து, அதை டிவிட்டரில் கமிஷனருக்கு மென்ஷன் போட்டுவிடுவதில் தொடங்கி, விபச்சாரம், கொலை உள்ளிட்ட பல விஷயங்களில் உடனடியாக கமிஷனருக்கு தகவல்கள் கொடுக்க தொடங்கினர் பொதுமக்கள்.
போன் மூலம் வரும் தகவல்களைவிட, டிவிட்டர் தகவல்கள் நம்பகத்தன்மை அதிகமுள்ளவையாக இருப்பதை உணர்ந்த போலீசாருக்கு, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டிவிட்டர் உதவிகரமாக இருந்தது. மேலும், டிவிட்டர் புகார்களுக்கு, காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளையும் எடுத்தது. மீடியாக்கள் உதவியால் இந்த தகவலை அறிந்து கொண்ட பெங்களூரு மக்கள், பெருமளவில் ரெட்டியை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.
இதன்விளைவாக, குறுகிய காலத்திலேயே, 1 லட்சம் ஃபாலோவர்களை தொட்டுள்ளார் பெங்களூரு போலீஸ் கமிஷனர். சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் சராசரியாக நூற்றில் ஒருவர் கமிஷனரை டிவிட்டரில் ஃபாலோ செய்துவருகிறார்கள். இதன் மூலம், கமிஷனரின் கவனத்திற்கு எவ்வளவு விஷயங்கள் சென்றடையும் என்பது பிரமிக்கத்தக்க விஷயம். இதைத்தான் காவல்துறை எதிர்பார்க்கிறது.
GOOD MORNING, ALL MY DEAR FOLLOWERS. CONGRATS!! WE HAVE REACHED THE 100 K MARK!! BCP'S GREAT LEAP IN BECOMING TRULY CITIZEN-CENTRIC (1/N)
— M N Reddi, IPS (@CPBlr) April 20, 2015 அதேநேரம், 7 கோடி மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த கர்நாடக முதல்வரான சித்தராமையாவை டிவிட்டரில் ஃபாலோ செய்வோர் எண்ணிக்கை இன்னமும் 20 ஆயிரத்தை கூட தொடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications