சிக்கன் கபாப்பை ருசிக்க சைக்கிளை திருடிய ‘காக்கா முட்டைகள்’... பெங்களூருவில்!
பெங்களூரு: பெங்களூருவில் சிக்கன் கபாப்பை ருசிப்பதற்காக காக்கா முட்டை பட பாணியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தேசிய விருது பெற்ற படம் காக்கா முட்டை. பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு சிறுவர்களின் கதை தான் இது. இப்படத்தில் பீட்சா சாப்பிடும் ஆசையில் அச்சிறுவர்கள் நிலக்கரியைத் திருடி விற்று பணம் சேர்ப்பார்கள்.

இந்நிலையில், காக்காமுட்டைகளின் ஐடியாவைப் பின்பற்றி பெங்களூருவில் இரண்டு சிறுவர்கள் சிக்கன் கபாப் சாப்பிடுவதற்காக சைக்கிளை திருடியுள்ளனர்.
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக சைக்கிள் திருட்டு அதிகமாக நடந்து வந்தது. இது குறித்தப் புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் 2 சிறுவர்கள் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அச்சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சிக்கன் கபாப் சாப்பிடுவதற்காக திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக அச்சிறுவர்கள் போலீசில் கூறியதாவது:-
எங்கள் 2 பேருக்கும் ‘சிக்கன் கபாப்' சாப்பிட வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது. இருந்தாலும் எங்கள் இருவரின் வீட்டிலும் அசைவ உணவுகள் சமைப்பது இல்லை. ஓட்டல்களில் சென்று சாப்பிடுவதற்கும் எங்களிடம் பணம் இல்லை. எப்படியாவது பணம் சம்பாதித்து ‘சிக்கன் கபாப்' ருசித்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
பணம் எவ்வாறு சம்பாதிப்பது? என்று நாங்கள் பல கோணங்களில் யோசித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எங்களின் மூளையில் ஒரு திட்டம் உதித்தது. அதாவது, வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சைக்கிள்களை திருடி விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்தோம். அப்படி திருடிய சைக்கிள்களை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து அந்த பணத்தில் ‘சிக்கன் கபாப்' சாப்பிட்டு வந்தோம்' என்றனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அச்சிறுவர்களை இனி இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எச்சரித்தனர். பின்னர், அச்சிறுவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கும் போலீசார் அறிவுரை கூறினர்.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications