தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்.. பெங்களூர் தமிழ்ச்சங்கம் போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடந்தது.
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது அங்கு இருந்த மக்கள் மீது தமிழக போலீஸ் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பெங்களூரில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. பெங்களூரில் இருக்கும் முக்கியமான அரசு கட்டிடமான மயோ ஹாலில் போராட்டம் நடைபெற்றது.
பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கும், போலீசுக்கும் எதிராக இதில் கோஷம் எழுப்பினார்கள். மேலும் தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் போஸ்டர்கள் தாங்கி போராட்டம் நடத்தினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications