யாருமே எதிர்பார்க்காத பவானி சிங் பல்டி...!
பெங்களூர்: ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் இன்றைய இன்னொரு முக்கிய அம்சம், அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் அடித்த பல்டிதான்.
இன்று காலை ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தனது தரப்பு வாதத்தை பவானி சிங் முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,, ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தனது முதல்வர் பதவிக்காலத்தின்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய ஜெயலலிதா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக முறையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை நிரூபிக்கவும் பட்டுள்ளன.
எனவே இவரை தற்போது ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார். அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவார். எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஒரு முறை கூட தவறான வழியில் நடந்ததில்லை. மேலும் அவர் இந்த காலகட்டத்தில் 2 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இது அரசியல் சூழ்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்காகும் என்றார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வாதிட்டனர்.
ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் வாதம் தொடர்ந்தபோது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு தான் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர் நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று கூறியபோது அனைவரும் வியப்படைந்தனர்.
பவானி சிங்கின் பல்டிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications