போபால் விஷவாயு விபத்து: 29 ஆண்டுகளாய் தொடரும் போராட்டம்!
போபால்: போபால் விஷவாயு சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று இன்றைக்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனைடு என்ற விஷவாயு வெளியானதால் உறக்க நிலையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு போராடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் பிழைத்தவர்களின் வாழ்க்கை உயிரிழந்தவர்கனை விட மிகவும் மோசமானதுதான். 29 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் அவர்கள் வாழ்க்கையோடு இன்றும் நிழலைப் போல தொடந்து கொண்டிருக்கிறது.

விஷவாயு எமன்
கார்பைடு தொழிற் சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனப்புகை,அதாவது விஷப்புகை, அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணில் மிக ஆழமாக பதிந்துள்ளது. இச்சம்பவம் நடந்து முடிந்த பிறகு குடியேறிய மக்களின் உடலையும், இந்த ரசாயனம் கலந்தமண், அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மண்ணில் ரசாயனம் கலந்த தண்ணீர் மட்டும்தான் கிடைக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள்
இதனால் அங்கு வாழும் மக்கள் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுடன் கண் பார்வையிழந்து, அழுகிப் போன அங்கங்களோடு துயரப்பட்டு வருகிறார்கள். மேலும் சிகிச்சைக்கு வருகின்ற நோயாளி களை, அரசு மருத்துவமனைகள் உரிய சிகிச்சை கொடுக் காமல் திருப்பி அனுப்பி விடுகிறது.

துரதிஷ்டசாலி இளைஞன்
சம்பவ தினத்தன்று பிறந்த ஒரு பையனுக்கு "மனூஸ்" அதாவது துர திருஷ்டசாலி என்று பெயர் சூட்டி பெற்றோர்கள் அழைக்கிறார்கள். வளர்ச்சி பெறாத உடலையும் விகாரமான தோற்றத்தையும் கொண்ட அந்த இளைஞன் 29 ஆண்டுகளாக பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தெரியாமல் வளர்ந்திருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அவனது பிறப்பை ஒரு பாவச்செயலாக எண்ணுகிறார்கள்.

வாழ்க்கையே பிரச்சினை
"ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்ச னைகள் உள்ளன. ஆனால் எங்களுடைய வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது" என்று கூறுகின்றனர் அங்குள்ள மக்கள். திருமணமான இளம்பெண்கள் கருதரிக்க இயலாமல் மீண்டும் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறார்கள். கணவ னால் கைவிடப்பட்ட நிறைய பெண்கள் கைத் தொழில் செய்து பிழைத்து வருகிறார்கள்.

தலைமுறை பாதிப்பு
மனநிலை பாதிக்கப்பட்டு, உடல் நோய்வாய்பட்டு விரக்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்கள், இயற்கையான மரணத்திற்காக காத்திருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறார்கள். அந்தத்தலை முறையினர்க்குப் பிறக்கும் குழந்தைகள் இன்றும் பல்வேறு ஊனங்களுடனும் உடல் குறைபாடு களுடனும் பிறக்கின்றன

தப்பிய நிர்வாகி
இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்த இரவே நிர்வாகி வாரன் அன்டர்சன் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுவிட்டார், மாபெரும் மனித இழப்பை பரிசாகக் கொடுத்த அன்டர்சனுக்கு அமெரிக்க அரசு எவ்விதத் தண்டனையும் கொடுக்கவில்லை
யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டு நிறுவனத்தைச் சார்ந்த 8 பேர் மீது குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு போபால் பெருநகரத் தலைமை நிதிபதி முன் வழக்கு நடைபெற்றது. 25 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 03. 06 2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேருக்குத் தலா இரண்டாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் இன்றைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிடைக்காத இழப்பீடு
போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு கிடைக்கவில்லை என்பது இன்றுவரை பெரும் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. மற்ற விபத்துகளில் பலியானவர்கள் அல்லது காயம் அடைந்தவர்களுக்கு கிடைத்த அளவுக்கு போபால் மக்களுக்கு இழப்பீடு கிடைக்கவே இல்லை என்பதுதான் கொடுமை.

என்றைக்கு விடியும்?
காய்ந்துபோன கண்கள், வறண்டுபோன தொண்டை, புண்பட்ட இதயத்திலிருந்து பிறக்கும் உணர்வுகளுக்கு என்றைக்காவது ஒருநாள் வடிகால் கிடைக்குமா, என்று அம்மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications