சமண கோயிலிலிருந்து கடத்தி சென்று, சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பழி வாங்கப்போவதாக பிரக்யா ஆவேசம்
Recommended Video
போபால்: 12 வயது சிறுமியை சமண கோயிலில் இருந்து கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 18 வயதேயான படுபாதகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமண மத கோயிலுக்கு சம்பவத்தன்று தனது 16 வயது உறவுக்கார பெண்ணுடன் 12 வயது சிறுமி சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட அவினாஷ் சாஹு (18) என்ற இளைஞர், சிறுமி தனியாக நின்றபோது நைசாக பேசி வெளியே கூட்டிச் சென்றுள்ளார்.

இதன்பிறகு வெளியே மறைவான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்ற இந்த இளைஞர், அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவர் தலைமீது கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த, சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில், அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, போபால் தொகுதி, பாஜக வேட்பாளரான பிரக்யா சிங் தாக்கூர், இந்த சம்பவத்திற்காக, மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது. முதல்வர் கமல்நாத் அவரது ச்சின்ட்வாரா தொகுதிக்கு மட்டுமே முதல்வராக உள்ளார் என்றும், இந்த சம்பவத்திற்கு பழிவாங்காமல் விடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட சிறுமியின் அம்மாவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் பிரக்யா சிங் தாக்கூர்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications