அப்ப "மாட்டு சாணம்".. இப்ப "கோமியம்".. லிட்டர் ரூ.4-க்கு வாங்கும் சத்தீஸ்கர்.. ஜூலை 28 முதல் அதிரடி
பசு கோமியத்தை லிட்டர் ரூ.4 க்கு வாங்கும் திட்டம் சத்தீஸ்கரில் துவங்க உள்ளது
ராய்ப்பூர்: ஜூலை 28 ம் தேதி முதல் பசு கோமியத்தை லிட்டர் ரூ.4 க்கு வாங்கும் திட்டம் துவங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநிலம் அதிரடியாக அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை மையப்படுத்தியும், முதன்மைப்படுத்தியும், பல்வேறு திட்டங்களை அம்மாநில அரசுகள் செய்து வருகின்றன.
இதில் ஒன்றும் வியப்பு இல்லை என்றாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரிலும் பசுக்களுக்கான முக்கியத்துவங்கள் கூடிவருகின்றன.. பசுக்களுக்காகவே புது புது திட்டங்களையும் அந்த அரசு தொடங்கி வைத்து வருகிறது.

மாட்டு சாணம்
சமீபத்தில், இங்கு பட்ஜெட் தாக்கலின்போது, பேரவைக்குள் கொண்டுவரப் பெட்டியானது, மாட்டு சாணத்தில் செய்ததாக முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியிருந்தார்.. இதற்கெல்லாம் காணம், கால்நடை வளர்ப்பு திட்டத்தை அதிகரிப்பதுதான்.. அதனாலேயே, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கோதன் நியாய் யோஜனா (Godhan Nyay Yojana) திட்டம் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, மாட்டு சாணமும் வாங்கப்பட்டு வருகிறது.

மாட்டு சாணம்
அதாவது, ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை ரூ.1.50க்கு சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது... கொள்முதல் செய்யப்படும் சாணம், உலரவைக்கப்பட்டு, அது இயற்கை உரமாக மாற்றப்பட்டு அதன்பிறகு விற்கப்படுகிறது. அந்த வகையில் 2 ஆண்டுகளில் ரூ.150 கோடிக்கு சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. மேலும், இதுவரை 20 லட்சம் குவிண்டால் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது... இதன் மூலம் அரசுக்கு ரூ.143 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது..

பசு கோமியம்
இதன் தொடர்ச்சியாக, இப்போது பசு கோமியத்துக்கு பணம் கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.. இது தொடர்பாக தொழில்நுட்பக்குழு அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்... இந்த தொழில்நுட்பக்குழு இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து செயல்படுத்த உதவும் என்று, கூட்டத்துக்கு பிறகு முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.. அநேகமாக வரும் 28ம் தேதி சத்தீஸ்கரில் நடக்க போகும் ஹரேலி பண்டிகையின்போது, இந்த திட்டத்தை சத்தீஸ்கர் அரசு தொடங்க உள்ளது.

கோமியம்
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "சாணத்தை இயற்கை உரமாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டது... பசு மேலாண்மை குழுவினர், பசுவின் கோமியத்துக்கான விலையைத் தீர்மானிப்பார்கள்... ஆனால், விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள், கால்நடை வளர்ப்போர் கோமியத்துக்கு லிட்டர் ரூ.4 வரை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்" என்றனர்.

கலெக்டர்கள்
இதனிடையே, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு தனியார் பசுபாதுகாப்பு மையத்தை அடையாளம் காண வேண்டியது மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பாகும் என்றும், இதற்குரிய மகளிர் சுய உதவிக் குழுவினரையும் அடையாளம் காண வேண்டும் என்றும், கோமியம் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் உத்தரவு ஒன்று பறந்துள்ளது.. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications