Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. வாங்கிய சம்பளத்தை வட்டியோடு திருப்பி தரணும்- கொல்கத்தா ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2016இல் நடந்த ஆசிரியர்கள் நியமனத்தைக் கொல்கத்தா ஐகோர்ட் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016இல் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் கொல்கத்தா ஐகோர்ட் சிறப்பு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

Big Blow To Trinamool as Kolkata high court fires 25000 Bengal Teachers and orders to Return their Salary

இந்தச் சூழலில் கொல்கத்தா ஐகோர்ட் இன்று இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ரத்து செய்து உத்தரவு: அதாவது வெற்று ஓஎம்ஆர் தாள்களைச் சமர்ப்பித்த பிறகு சட்டவிரோதமாக அந்த பள்ளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பதால் அந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட், நான்கு வாரங்களுக்குள் அவர்கள் இதுவரை தாங்கள் பெற்ற சம்பளத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிபதிகள் டெபாங்சு பாசக் மற்றும் எம்.டி ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் கவனிப்பார்கள் என்றும் கொல்கத்தா ஐகோர்ட் கூறியுள்ளது. பணி நியமனம் பெற்றவர்களில் சோமா தாஸ் என்பவர் மட்டும் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் மட்டும் கருனை அடிப்படையில் தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்வார் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மம்தாவுக்கு மேலும் தலைவலி.. மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு.. என்ன நடந்தது?


புதிய செயல்முறை: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன செயல்முறை குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும், ஆசிரியர்கள் நியமிக்க புதிய நியமன செயல்முறையைத் தொடங்குமாறும் கொல்கத்தா ஐகோர்ட் மேற்கு வங்க ஸ்கூல் சர்வீஸ் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Big Blow To Trinamool as Kolkata high court fires 25000 Bengal Teachers and orders to Return their Salary

இருப்பினும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மேற்கு வங்க ஸ்கூல் சர்வீஸ் கமிஷன் தலைவர் சித்தார்த் மஜூம்டர் அறிவித்துள்ளார். இந்த ஆசிரியர் பணி நியமன வழக்கில் தான் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உட்பட பல திரிணாமுல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தா சாடல்: பாஜக தலைவர்களின் தலையீடு நீதித்துறை மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளில் இருப்பதாக இந்த தீர்ப்பு வந்த பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம் அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி விரைவில் மேற்கு வங்கத்தில் பெரும் புயல் அடிக்கப் போகிறது என்று கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, "இது தான் அந்த புயலா.. 26,000 பேரின் வேலைகளைப் பறித்து அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளியிருக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

பின்னணி என்ன: மேற்கு வங்கத்தில் காலியாக இருந்த 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு ஆசிரியர்கள், குரூப்-சி மற்றும் டி பணியாளர்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த 2016இல் வெளியானது. 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு மேற்கு வங்கம் முழுவதும் இருந்து 23 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் எழுத்து தேர்வையும் எழுதினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.

இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளது என்பதே புகாராகும். 24 ஆயிரம் காலியிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், 25,753 பேருக்கு வேலை தரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.. இந்த வழக்கில் தான் பல திரிணாமுல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது நீதிமன்றம் அவர்கள் பணி நியமனங்களை ரத்து செய்து ஊதியத்தையும் திருப்பி தர உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+