Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வேலி தாண்டிய வெள்ளாடு".. ரீட்டா கவர்ச்சியில் விழுந்த விமல்.. அது யாரு அனில்.. கடைசியில் பார்த்தால்?

மேட்ரிமோனியல் ஆப் மூலமாக திருமணம் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: ரீட்டாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது விமலுக்கு.. மனம்விரும்பி திருமணம் செய்த நிலையில்தான், அந்த பயங்கரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.

குஜராத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் விமல் காரியா... இன்னும் திருமணம் ஆகவில்லை.. அதனால், மேட்ரிமோனி ஆப் ஒன்றை நாடினார்.. அந்த ஆப்பில் பெண் ஒருவரை சந்தித்து உள்ளார்..

அவரை பார்த்ததுமே விமலுக்கு எக்கச்சக்கமாக பிடித்து போய்விட்டது.. உடனே அந்த பெண்ணை பற்றி விசாரித்தார்.. அசாமின் கவுகாத்தி நகரை சேர்ந்தவராம் அவர்.. ரீட்டா தாஸ் என்பது அந்த பெண்ணின் பெயர் என்பது தெரியவந்தது.

 டைவர்ஸ் சர்ட்டிபிகேட்

டைவர்ஸ் சர்ட்டிபிகேட்

பிறகு ரீட்டாவுடன் தினம் தினம் பேச ஆரம்பித்தார் விமல்... ஒருகட்டத்தில் இருவரும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.. ஆனால், ரீட்டா அந்த மேட்ரிமோனியல் ஆப்பில், தன்னை பற்றி அளித்திருந்த குறிப்புகளில், "விவாகரத்து பெற்றவர்" என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். இது மட்டும் விமலுக்கு ஏனோ உறுத்தி கொண்டேயிருந்தது.. அதனால், அந்த விவாகரத்து பெற்ற ஆவணங்களை ரீட்டாவிடமே விமல் ஒருமுறை கேட்டிருக்கிறார்.. அதற்கு ரீட்டா, தனக்கு ஊர்பஞ்சாயத்தில் வைத்து முன்பொரு முறை கல்யாணம் நடந்தது.. அதனால், அதற்கெல்லாம் டைவர்ஸ் சர்ட்டிகேட் இல்லை என்று சொல்லிவிட்டார்.

 றெக்கை கட்டி பறந்தார்

றெக்கை கட்டி பறந்தார்

இதனால் விமலும் அந்த விஷயத்தை பற்றி பெரிதுப்படுத்தவில்லை.. பிறகு இருவருக்கும் ஆமதாபாத்தில் தடபுடலாக கல்யாணம் நடந்துள்ளது.. 6 மாதங்கள் இந்த ஜோடி உல்லாச வாழ்க்கையில் றெக்கை கட்டி பறந்தன.. இந்நிலையில், திடீரென ஒரு நாள் அசாமில் இருந்து, ரீட்டாவின் அம்மா போன் செய்துள்ளார்.. நில விவகாரம் ஒன்று சிக்கலில் உள்ளதால், அதை தீர்ப்பதற்காக அசாம் வந்துபோக வேண்டும் என்று ரீட்டாவை அழைத்துள்ளார்.. உடனே விமலும், நில விவகாரம் என்றால் உடனே போயாக வேண்டும் என்று சொல்லி மனைவியை அசாம் அனுப்பி வைத்தார்.. அதோடு சரி.. ரீட்டா வரவேயில்லை..

 வெட்ட வெளிச்சம்

வெட்ட வெளிச்சம்

ரீட்டாவின் வக்கீலிடமிருந்து விமலுக்கு போன் மட்டுமே வந்தது.. அப்போது, ரீட்டாவுக்கு எதிராக கேஸ் கோர்ட்டில் நடப்பதால், ரூ.1 லட்சம் செலவாகும்... மற்றபடி கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.. நில விவகாரத்தில் போலீஸ் கஸ்டடியில் ரீட்டா இருக்கக்கூடும் என்று நினைத்து, அவரது வங்கி கணக்கிற்கு விமல், ஜாமீன் பணம் அனுப்பியிருக்கிறார்.. அனுப்பியதற்காக, ஆன்லைன் வழியே கோர்ட்டு டாக்குமெண்ட்களும் விமலுக்கு கிடைத்தன.. அப்போதுதான், ரீட்டாவின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்தது. அவரது உண்மையான பெயர் ரீட்டா தாஸ் கிடையாதாம்.. ரீட்டா சவுகான் என்று பதிவாகி இருந்தது.. மேலும், பணமோசடி, நிலமோசடி, மோசடி, திருட்டு, வனவிலங்கு வேட்டையாடுதல் என பல்வேறு கேஸ்கள் ரீட்டா மீது பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் விமல்..

 ஹைலைட்ஸ்

ஹைலைட்ஸ்

இதைவிட ஹைலைட், ரீட்டா மீது கொலை கேஸ்கூட இருக்கிறதாம்.. இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை அசாம் கோர்ட்டு பிறப்பித்திருக்கிறது.. அதிலிருந்து தப்பிக்கவே ரீட்டா, தலைமறைவாக சுற்றி சுற்றி திரிந்து வந்தாராம்.. இதனால் மிரண்டுபோன விமல், ரீட்டா பற்றி கூகுளில் மேலும் சில விஷயங்களை தேடி பார்த்தார். அப்போதுதான் அனில் என்பவரை பற்றிய அறிய நேர்ந்தது. இவர்தான் ரீட்டாவின் கணவர்.. ரீட்டாவுக்கு ஏற்கனவே அணில் என்பவருடன் 2007-ல் திருமணம் நடந்துள்ளது.. அந்த போட்டோக்களும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது..

 திருடி யார்

திருடி யார்

யார் இந்த அனில்? இந்த அனில் சவுகான் என்பவர், டெல்லி கான்பூர் பகுதியில் சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளியாக இருந்து வந்து உள்ளார். அவருக்கு வயது 52. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அவர் கார்களை திருட தொடங்கியுள்ளார். அதாவது, அணில் என்பவரே ஒரு கிரிமினல்தானாம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கார்களை திருடி, விற்று லாபம் சேர்த்துள்ளார்.. அதற்கு பிறகு, அதையே ஒரு பிசினஸாக செய்துள்ளார்.. முக்கியமாக மாருதி 800 ரக கார்களை மட்டுமே அதிக அளவில் திருடி விற்று வந்துள்ளார்.. சில இடங்களில், காரை திருடும்போது, அந்த கார் டிரைவர்களையும படுகொலை செய்துள்ளார்..

 ரீட்டா குறி

ரீட்டா குறி

இப்படி திருடிய கார்களை நேபாளம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நல்ல விலைக்கு விற்றுள்ளார். அந்த தொகையை கொண்டு டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய, பெரிய சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். 27 வருடங்களாகவே இந்த கார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருபவராம் அனில்.. ஒருகட்டத்தில் பணத்தை குவித்து முடித்ததுமே, அசாமுக்கு சென்று வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.. போலீசார் இவரை பல முறை கைது செய்துள்ளனர்.. ஒருமுறை அதாவது 2015-ம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏவுடன் கைது செய்யப்பட்ட அனில், 5 வருடங்கள் சிறையில் இருந்து 2020-ல் விடுதலையானார்..

 அனில் அனில் அனில்

அனில் அனில் அனில்

வெளியே வந்ததுமே ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அனிலுக்கு எதிராக 180 கேஸ்கள் உள்ளன... சமீபத்தில், மத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் அவரை கைது செய்தனர்.. இந்த நாட்டின் மிக பெரிய கார் திருடன் யார் என்றால் அது அனில்தானாம். அனிலுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்... அசாமில் தங்கிய அவர், அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்துள்ளார். இதற்காக, உள்ளூர் தலைவர்கள் சிலருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார். அனிலிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த 3 மனைவிகளில் ஒருவர்தான் ரீட்டா சவுகான்.. இவ்வளவு விஷயத்தையும் கூகுளில் தெரிந்து கொண்ட விமல், அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்துள்ளார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+