Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் அகங்காரம்.. எகிறியடித்த மம்தா! மேற்கு வங்கத்தில் ஜஸ்ட் 12 எடுத்த பாஜக.. 29 அள்ளிய திரிணமூல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 12 வருடங்களை கடந்து முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி, மீண்டும் மேற்கு வங்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.. பாஜக 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, பாஜகவுடனேயே இதற்கு முன்பு கூட்டணி வைத்தவர்தான்.. ஆனாலும், தற்போது பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்... இந்தியா கூட்டணிக்கான ஆதரவை மம்தா தந்தபோதிலும், காங்கிரஸுடனோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ கூட்டணி வைக்காமல், தனித்தே களம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

West Bengal Lok Sabha Election 2024 results BJP Congress West Bengal Election Results Lok Sabha West Bengal Election resu

அரசியல்: இதற்கு காரணம், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தேசிய அரசியலில் தனக்கான கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தால், அது மாநிலத்தில் கட்சியின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்துவிடும் என்றும் கணக்கு போட்டுள்ளாராம். அதனால்தான், இந்த முறை தேர்தலில் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாய்ப்பு தந்து போட்டியிட செய்திருக்கிறாராம்.

அந்தவகையில், திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவும் தனித்தே போட்டியிட்டுள்ளது.. அதேபோல, இந்தியா கூட்டணியும் களம் கண்டுள்ளது..

கூட்டணிகள்: இந்த அணியில் சிபிஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிபிஐ போன்றவை உள்ளன.. இதில், சிபிஎம் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன..

அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும், சிபிஐ 2 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்றன. இப்படி ஒரு கூட்டணி அமைந்ததுமே, மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதில் பெருத்த எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

பாஜக முந்துமா: எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடும் போட்டி இருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள்.. இதில், மம்தாவுக்கு சந்தேஷ்காலியில் நடைபெற்ற கலவரம் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துவிட்டது எனலாம்.. திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைத்த இந்த சறுக்கல்தான், பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அஸ்திரமாகிவிட்டது... காரணம், அந்த பகுதியை சேர்ந்த பெண்ணையே வேட்பாளராக களமிறக்கியது கூடுதல் பரபரப்பை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்திவிட்டது.

அதுமட்டுமல்ல, பொது சிவில் சட்டம், இந்து - முஸ்லிம் விவகாரம் போன்றவை பாஜகவுக்கு பின்னடைவை தரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், சந்தேஷ்காளி சம்பவம், நில அபகரிப்பு சம்பவங்களை "திருப்பி" போட்டு பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்தது பாஜகவுக்கு பலத்தை தந்துள்ளதாக கணிப்புகளில் வெளியாகின.

கணிப்புகள்: இதுவரை மொத்தம் 14 கருத்து கணிப்புகளில், 9-ல் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்பட்டது.. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே மேற்கு வங்கத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏபிபி -C வோட்டர் எக்ஸிட் போலில், பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால், இந்த கணிப்புகளை மம்தா கடுமையாக விமர்சித்திருந்தார்.. "இந்த கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்னாடியே, வீட்டில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டவை... அதனால்தான், கள நிலவரத்துடன் அவை எதுவுமே ஒத்துப்போகவில்லை. 2016, 2019, 2021ம் ஆண்டுகளிலும், கருத்துக்கணிப்பு எப்படி நடத்தப்பட்டன, அவையெல்லாம் எல்லாம் எப்படி போலியானவை என்று தேர்தல் முடிவுகள் வெட்ட வௌிச்சமாக்கியிருந்தது என்பதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம் " என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், இன்றைய தினம் ரிசல்ட் வரப்போகிறது. காலை 8 மணியிலிருந்து தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.. அதன்படி, கருத்து கணிப்புகளில் வெளியாகியிருந்தபடியே, பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது..

தபால் ஓட்டுக்கள்: காலை 9.30 மணி நிலவரப்படி, பாஜக 24 இடங்களை தக்க வைத்து முன்னிலை பெற்றிருந்தது.. திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 15 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது.. காங்கிரஸ் 2 இடங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இதில் மாறுபாடு தென்பட்டுள்ளது.

அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.. பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்று, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணியோ வெறும், 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இந்த கணிப்புகளும் மாறக்கூடும்.

12.30 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.. பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்று, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணியோ வெறும், 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இந்த கணிப்புகளும் மாறக்கூடும்.

10 இடங்கள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 3 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.69% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.. பாஜக 40.64% வாக்குகளுடன் மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.. அதாவது, 2019ல் 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இப்போது வெறும் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால் அக்கட்சிக்கு 8 இடங்கள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்: கடந்த 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை எடுத்துக கொண்டாலும், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 290 தொகுதிகளில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் 48.02% வாக்குகளுடன் 215 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், 293 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 37.97% வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது. அதாவது திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியில் பாதியைகூட கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை 4.30 மணி நிலவரத்தின்படி, திரிணமூல் 30 இடங்களை பெற்று முன்னிலையில் இருந்தது.. பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தையே தற்போதும் தக்க வைத்துள்ளது.. காங்கிரஸ் கட்சியோ 1 இடத்தை மட்டுமே பெற்றுவந்தது... இதில், கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தபடியே இருந்தார்.

பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருமே மாறி மாறி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், 2வது இடத்தையே பாஜக பெற்றுவருகிறது.

இறுதியில், 29 தொகுதிகளில் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது.. பாஜக 12 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.. மொத்தத்தில், பெரும்பாலான இடங்களில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் முன்னிலை பெற்றிருக்கிறது.. பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருமே மாறி மாறி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், 2வது இடத்தையே பாஜக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொடுமைகள்: "இவ்வளவு கொடுமைகள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை இந்தியா வென்றுள்ளது. அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள். பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை 400 இடங்களைத் தாண்டும் என்று கூறிய பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+