ஆடைக்குள் 20 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கொச்சி ஏர்போர்ட்டில் கைது
கொச்சி: ஆடைக்குள் மறைத்து வைத்து துபாயில் இருந்து கொச்சிக்கு 20 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் விமான நிலையத்தில் சிக்கினர்.
துபாயில் இருந்து கொச்சிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை துபாயில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது.
அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது திருச்சூர் மற்றும் கோழிக்கூட்டை சேர்ந்த 2 பர்தா அணிந்த பெண்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் தங்கள் ஆடைகளில் 20 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.8 கோடியாகும். அந்த இருவரும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் கொச்சியில் இருந்து துபாய் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதுவரை பிடிக்கப்பட்ட கடத்தல் தங்கத்தில் முதன்முறையாக அதிகபட்சமாக 20 கிலோ தங்கம் தற்போது தான் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications